

ராம்சரண் நடித்து வரும் ‘பெடி’ படத்துன் ஓடிடி உரிமை பெரும் விலைக்கு விற்பனையாகி இருக்கிறது.
ராம்சரண் நடித்து வரும் ‘பெடி’ படத்தின் ஓடிடி உரிமையினை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. அனைத்து மொழிகளின் ஓடிடி உரிமையினை சேர்த்து ரூ.105 கோடிக்கு கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை பெரும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள் வர்த்தக நிபுணர்கள்.
ஏனென்றால், ராம்சரணின் முந்தைய படமான ‘கேம் சேஞ்சர்’ பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகி படுதோல்வியை தழுவியது. இதன் உரிமையினை அமேசான் ப்ரைம் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. அதற்கு பின்பும் இதன் உரிமையினை ரூ.105 கோடிக்கு வாங்கியிருப்பது ஆச்சரியம் என்கிறார்கள்.
‘உபேனா’ படத்தின் இயக்குநர் புஜ்ஜி பாபு சனா – ராம்சரண் கூட்டணி படம் ‘பெடி’ என்பதால் இந்த விலைக்கு போயிருப்பதாக கூறப்படுகிறது. இதில் சிவராஜ்குமார், ஜான்வி கபூர் உள்ளிட்ட பலர் ராம்சரணுடன் நடித்து வருகிறார்கள். இதற்கு ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.