

ஓடிடி தளங்களில் ஜூன் 13-ம் தேதி ‘லெவன்’ படம் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் எந்தவொரு சத்தமுமின்றி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘லெவன்’. சைக்கோ கில்லரை கண்டுபிடிப்பது என்ற திரைக்கதை அமைப்பில் இறுதிக்காட்சி வரை த்ரில்லராக கொண்டு சென்றது பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. குறிப்பாக மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் இப்போதும் கொண்டாடப்பட்டு வருகின்றன.
தற்போது ‘லெவன்’ திரைப்படம் ஜூன் 13-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ஒரே சமயத்தில் டெண்ட்கொட்டா, ஆஹா மற்றும் அமேசான் ப்ரைம் ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. திரையரங்குகளில் பெற்ற வரவேற்பை முன்வைத்து, ஓடிடி தளத்தில் நல்ல வரவேற்பைப் பெரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.
அஜீஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி, ஷ்ஷாங், அபிராமி, திலீபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஒளிப்பதிவாளராக கார்த்திக் அசோகன், இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்திருந்தனர். இப்படத்தினை ஏ.ஆர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.