

‘பஞ்சாயத்’ தொடரின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா காலகட்டத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் ‘பஞ்சாயத்’. வட இந்திய கிராமங்களின் நிலையை நகைச்சுவையாகவும், நெகிழ்ச்சியுடனும் கண்முன் நிறுத்திய இத்தொடரின் மூன்றாவது சீசன் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் ‘பஞ்சாயத்’ தொடரின் 4வது சீசனின் டீசரை ப்ரைம் வீடியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. மும்பையில் நடைபெற்று வரும் வேவ்ஸ் மாநாட்டில் இந்த டீசர் வெளியிடப்பட்டது. மேலும் இத்தொடர் வரும் ஜூலை 2ஆம் தேதி ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.