Published : 02 Mar 2025 11:56 PM
Last Updated : 02 Mar 2025 11:56 PM
ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி மாபெரும் சாதனையை படைத்துள்ளது ‘சங்கராந்திக்கி வஸ்துணம்’ திரைப்படம்.
தெலுங்கில் பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘சங்கராந்திக்கி வஸ்துணம்’. உலகளவில் இதுவரை ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. மார்ச் 1-ம் தேதி மாலை 6 மணியளவில் ஜீ5 தொலைக்காட்சி மற்றும் ஓடிடியில் இப்படம் வெளியானது. ஓடிடியில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. தொலைக்காட்சியில் என்ன சாதனை புரிந்திருக்கிறது என்பது தெரிய இன்னும் சில தினங்களாகும்.
ஜீ5 ஓடிடி தளத்தில் ‘சங்கராந்திக்கு வஸ்துணம்’ படம் வெளியான 12 மணி நேரத்தில் 100 மில்லியன் பார்வைகளை கடந்து, 1.3 மில்லியன் பார்வையாளர்களிடம் சென்றிருக்கிறது. இது மாபெரும் சாதனையாகும். இப்படத்தின் மூலம் ஜீ5 ஓடிடி தளம் பெரும் பிரபலமடைந்திருப்பதாக நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
‘ஆர்.ஆர்.ஆர்’ மற்றும் ‘ஹனுமன்’ ஆகிய படங்களின் 12 மணி நேர சாதனைகளை பல மடங்கு முன்னேறி கடந்துள்ளது ‘சங்கராந்திக்கி வஸ்துணம்’ திரைப்படம். இதன் மூலம் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சீரஞ்சிவி படத்தினை இயக்கி முடித்துவிட்டு, மீண்டும் ‘சங்கராந்திக்கி வஸ்துணம் 2’ படத்தினை இயக்கவுள்ளார் அனில் ரவிப்புடி. இப்படம் 2027-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
HISTORY CREATED!
The BIGGEST OPENING EVER on ZEE5 in just 6 hours!
Experience the magic of #SankranthikiVasthunam
Streaming Now in Malayalam | Hindi | Tamil | Kannada| Telugu @VenkyMama @AnilRavipudi @aishu_dil @Meenakshiioffl #BheemsCeciroleo #Dilraju #Shirish @YoursSKrishna pic.twitter.com/udEZi473ov— ZEE5 Telugu (@ZEE5Telugu) March 2, 2025
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT