

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் மாதவன் நடிக்க புதிய வெப் தொடர் ஒன்று தயாரிப்பில் இருக்கிறது.
கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் புதிய வெப் தொடர் ஒன்று தயாராகி வருகிறது. இதில் மாதவன் நாயகனாக நடித்து வருகிறார். இந்த வெப் தொடர் ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதில் கவுதம் கார்த்திக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இருவருடன் வேறு சில நடிகர்களும் நடிக்கவிருப்பதாக குழுவினர் தெரிவித்தார்கள்.
இந்தத் தொடரினை சாருகேஷ் சேகர் இயக்கி வருகிறார். இவர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் நேரடி ஓடிடி தளத்தில் வெளியான ‘அம்மு’ படத்தினை இயக்கியவர். அதற்குப் பிறகு மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பிலேயே வெப் தொடரை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்த தொடருக்கு ‘LEGACY’ எனத் தலைப்பிட்டு இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.