

நந்தா கிஷோர் எமானி இயக்கத்தில், நிவேதா தாமஸ் நடித்துள்ள ‘35 சின்ன விஷயம் இல்ல’ திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
நடிகை நிவேதா தாமஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் பிரியதர்ஷினி, விஸ்வதேவ் ரச்சகொண்டா, கௌதமி, பாக்யராஜ், கிருஷ்ண தேஜா, அருண் தேவ், அபய், அனன்யா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
ஒரு நடுத்தர குடும்பத்து தாய் தனது மகன் படிப்பில் திணறுகையில், அவனை 35 மதிப்பெண்களைப் பெற வைக்க முயற்சிக்கிறார். இது அவர்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகிறது. ஒரு அசத்தலான ஃபேமிலி டிராமாவாக உருவாகியிருந்த இப்படத்தை கிஷோர் எமானி இயக்கியிருந்தார்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் விவேக் சாகர் இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, எடிட்டராக பிரசன்னா பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.