‘காதலிக்க நேரமில்லை’ பிப்.11-ல் ஓடிடியில் ரிலீஸ்!

‘காதலிக்க நேரமில்லை’ பிப்.11-ல் ஓடிடியில் ரிலீஸ்!
Updated on
1 min read

‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பிப்ரவரி 11-ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

ரவி மோகன், நித்யா மேனன், வினய், யோகி பாபு, லால், லட்சுமி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. கிருத்திகா உதயநிதி இயக்கிய இந்தத் திரைப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஏ. ஆர். ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்திருந்தார். பொங்கல் வெளியீடாக கடந்த ஜனவரி மாதம் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

தன்பாலின ஈர்ப்பு, லிவிங் டுகெதர் நவீன காதலை கதைக்களமாக கொண்டு உருவானது இந்தத் திரைப்படம். மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற இந்தப் படம், வர்த்தக ரீதியில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவில்லை. எனினும், இந்தப் படம் பேசிய விஷயங்கள் அனைத்தும் கவனிக்க வைத்தன.

‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை கைப்பற்றியிருந்த நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, பிப்ரவரி 11-ஆம் தேதியன்று இப்படம் நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீமாகிறது.

⁠Kadhalargal gavanathirkku … kadhalikka neram odhikkirunga, yaena…
Kadhalikka Neramillai is coming soon to Netflix on 11 February, in Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi!#KadhalikkaNeramillaiOnNetflix pic.twitter.com/nuAQsDsjy9

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in