‘அக்கா’ முதல் ‘டெஸ்ட்’ வரை: நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி வெளியிட்ட மெகா அறிவிப்புகள்!

‘அக்கா’ முதல் ‘டெஸ்ட்’ வரை: நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி வெளியிட்ட மெகா அறிவிப்புகள்!
Updated on
1 min read

ஒவ்வொரு ஆண்டும் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் அந்த ஆண்டு வெளியாகவுள்ள படங்கள், வெப் தொடர்களை பற்றிய அறிவிப்பை வெளியிடுவது வழக்கம். அதன்படி 2025-ஆம் ஆண்டில் வெளியாகவுள்ள படைப்புகள் குறித்த அறிவிப்பை நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டுள்ளது.

மண்டலா மர்டர்ஸ்: வாணி கபூர், வைபவ் ராஜ் குப்தா நடித்துள்ள இத்தொடரை கோபி புத்ரன், மானன் ராவத் இயக்கியுள்ளனர். சரண்தாஸ்பூர் என்ற மர்மம் நிறைந்த ஒரு ஊரில் நடக்கும் ஒரு கொலையை பின்னணியாக கொண்டு க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ளது.

சூப்பர் சுப்பு: சந்தீப் கிஷன் நடிக்கும் புதிய வெப் தொடர். நெட்ஃப்ளிக்ஸ் தயாரிக்கும் முதல் தெலுங்கு தொடரான இதனை மல்லிக் ராம் இயக்கியுள்ளார்.

டெஸ்ட்: மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிக்கும் படம் இது. கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை சசிகாந்த் இயக்கியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in