‘புஷ்பா 2 - தி ரூல்’ ஓடிடியில் வியாழக்கிழமை ரிலீஸ்!

‘புஷ்பா 2 - தி ரூல்’ ஓடிடியில் வியாழக்கிழமை ரிலீஸ்!
Updated on
1 min read

மிகப் பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை தொடர்ந்து, அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2 - தி ரூல்’ திரைப்படம், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை (ஜன.30) வெளியாகிறது.

சுகுமார் இயக்கத்தில் உருவான இந்த வெற்றிப் படம், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. கடந்த திங்கட்கிழமை நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட பதிவில் 23 நிமிட கூடுதல் காட்சிகளுடன் ரீலோடட் வெர்ஷனாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என கூறப்பட்டிருந்து.

அந்தப் பதிவில் அவர்கள் எந்தத் தேதியில் வெளியாகும் என்பதை குறிப்பிடவில்லை. இன்று நெட்ஃப்ளிக்ஸ் தரப்பில் வெளியிடப்படுள்ள வீடியோ பதிவில் ஜனவரி 30-ஆம் தேதி ‘புஷ்பா 2 - தி ரூல்’ ரீலோடட் வெர்ஷன் வெளியாகும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோவிலும் இந்தி மொழியில் வெளியிடுவது குறித்து நெட்ஃப்ளிக்ஸ் எந்தத் தகவலும் அளிக்கவில்லை. இதற்கான காரணம் என்ன என்பதும் தெரியவில்லை. ‘புஷ்பா 2’ படத்தை நெட்ஃப்ளிக்ஸ் அனைத்து மொழிகளிலும் ஸ்ட்ரீம் செய்யும் உரிமத்தை ரூ.275 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் முதன்மைக் கதாபாத்திரத்திலும், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ள இந்தத் திரைப்படம், உலகம் முழுவதும் ரூ.1,740 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அதிக வசூல் செய்த இந்திய படங்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது ‘புஷ்பா 2- தி ரூல்’.

‘புஷ்பா’ முதல் பாகத்தில் சாதாரண கூலி தொழிலாளியாக இருந்து செம்மரக் கடத்தல் சிண்டிகேட்டின் தலைவனாக அல்லு அர்ஜுன் உயர்வது வரை கதை அமைக்கப்பட்டிருக்கும். செம்மரக் கடத்தலை தடுக்க வரும் எஸ்பி ஃபஹத் ஃபாசில் உடன் அல்லு அர்ஜுனுக்கு மோதல் தொடங்குவது வரை முதல் பாகத்தில் காட்டியிருப்பார்கள். இந்த இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ஃபஹத் ஃபாசில் மோதல் ஒரு புறம் இருக்க மாநிலத்தின் முதல்வரையே மாற்றும் சக்தியாக அல்லு அர்ஜுன் எப்படி மாறுகிறார் என்பதையே கதையாக வைத்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in