

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ‘ஆபீஸ்’ என்ற வெப் தொடர் வெளியாக உள்ளது. இதற்கான டைட்டில் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
காமெடி பாணியிலான இந்த தொடரை கபீஸ் இயக்கியுள்ளார், இதற்கு முன் ஹாட்ஸ்டாரில் வெளியான ‘ஹார்ட் பீட்’ என்ற தொடரில் நடித்திருந்த குரு லக்ஷ்மண், சபரீஷ் ஆகியோர் இதிலும் இடம்பெற்றுள்ளனர். மேலும் ஸ்மேகா, கீர்த்திவேல், கெமி, பரந்தாமன், தமிழ்வாணி, சரித்திரன், சிவா ஆகியோருடன் அரவிந்த், பிராங்க்ஸ்டர் ராகுல் மற்றும் டி.எஸ்.ஆர் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.
கிராமம் ஒன்றில் அமைந்துள்ள ஒரு தாசில்தார் அலுவலகத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளைச் சுற்றி இத்தொடர் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான டைட்டில் பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது.