நீக்கப்பட்ட காட்சிகள் உடன் ‘மெய்யழகன்’ அக்.25-ல் ஓடிடியில் ரிலீஸ்!

நீக்கப்பட்ட காட்சிகள் உடன் ‘மெய்யழகன்’ அக்.25-ல் ஓடிடியில் ரிலீஸ்!
Updated on
1 min read

சென்னை: கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள ‘மெய்யழகன்’ திரைப்படம் வரும் அக்டோபர் 25-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘96’ படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெய்யழகன்’. படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. அரவிந்த் சாமி, கார்த்தி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், இளவரசு, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தமிழகத்தில் வெளியிட்டது. கடந்த செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

படத்தில் கமல் குரலில் வெளியான ‘யாரோ இவன் யாரோ’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்ததால் 18 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டது. இந்நிலையில், அந்தக் காட்சிகளுடன் வரும் அக்டோபர் 25-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவான இப்படம் 40 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை நெட்ஃப்ளிக்ஸில் தமிழ் தவிர்த்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளிலும் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in