‘Citadel: Honey Bunny’ வெப் சீரிஸ் ட்ரெய்லர் எப்படி? - சமந்தாவின் ஆக்‌ஷன் விருந்து! 

‘Citadel: Honey Bunny’ வெப் சீரிஸ் ட்ரெய்லர் எப்படி? - சமந்தாவின் ஆக்‌ஷன் விருந்து! 
Updated on
1 min read

சென்னை: வருண் தவான், சமந்தா நடித்துள்ள ‘Citadel: Honey Bunny’ வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ட்ரெய்லர் எப்படி?: “இங்கே ஒருவரை விட மற்றொருவர் மோசமானவர்கள். அவர் உங்களை வீழ்த்துவாரா? அல்லது நீங்கள் அவரை வீழ்த்த போகிறீர்களா?” என்ற வசனத்துடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. சமந்தாவுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அவரை அடைகாக்கும் பொறுப்பில் இருக்கும் சமந்தா, அடுத்தடுத்து துப்பாக்கியும் கையுமான ஆக்‌ஷனில் மிரட்டுகிறார்.

ஒரு கட்டத்தில் தன் மகளிடம், “நான் ஏஜென்டாக இருந்தேன்” என்ற உண்மையை உடைக்கிறார். “ஜேம்ஸ் பாண்டை போலவா?” என்று மகள் கேட்கிறார். அடுத்த காட்சியில் திரைப்படத்தின் ஆடிஷனில் கலந்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் அவருடன் வருண் தவான் இணைகிறார். இருவரும் காதலிப்பது போல காட்டப்படுகிறது. காதல், ரகசிய ஏஜென்ட், உளவாளிகள், ஆக்‌ஷன், தாய்மை, நடுவே திரைப்பட ஆடிஷன் என விறுவிறுப்பாக நகரும் ட்ரெய்லர் கதைக்களம் குறித்து கணிக்க முடியாத வகையில் கடக்கிறது.

கேகே மேனனின் மாஸ் இன்ட்ரோவும், சிம்ரனின் என்ட்ரியும் கவனிக்க வைக்கிறது. மொத்த ட்ரெய்லரிலும் லேடி ஜேம்ஸ் பாண்டாக ஈர்க்கிறார் சமந்தா. இந்த இணையத் தொடர் நவம்பர் 7-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகிறது.

‘Citadel: Honey Bunny’ - கடந்த 2022-ம் ஆண்டு ரிச்சர்ட், பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான இணையத் தொடர் ‘சிட்டாடல்’. இந்தத் தொடரின் அடுத்த பாகத்துக்கு ‘‘Citadel: Honey Bunny’’ என தலைப்பிடப்பட்டுள்ளது. ‘தி ஃபேமிலி மேன்’, ‘பர்ஸி’ தொடர்களை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இந்த தொடரை இயக்கியுள்ளனர். வருண் தவான், சமந்தா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், கே.கே.மேனன், சிம்ரன், சாகிப் சலீம், சிக்கந்தர் கெர், சோஹம் மஜும்தார், சிவன்கித் பரிஹார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் தொடர் வரும் நவம்பர் 7ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ட்ரெய்லர் வீடியோ:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in