

‘மர்மதேசம்’ நாகா இயக்கியுள்ள, புராண சாகச த்ரில்லர் இணைய தொடருக்கு ‘ஐந்தாம் வேதம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். ஜீ 5 தளத்தில் வரும் 25ம் தேதி வெளியாகும் இத்தொடரை, அபிராமி மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ளது. இதில் சாய் தன்ஷிகா, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய்.ஜி. மகேந்திரா, ராம்ஜி, தேவதர்ஷினி, பொன்வண்ணன் உட்பட பலர் நடித்துள்ளனர். தனது தாயின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக, வராணசிக்கு செல்லும் அனுவின் பயணத்தில் இந்தக் கதைத் தொடங்குகிறது.
வழியில், ஒரு மர்மமான நபரைச் சந்திக்கிறாள். அவர் பழங்கால நினைவுச்சின்னத்தை அவளிடம் ஒப்படைத்து தமிழ்நாட்டில் உள்ள சாமியாரிடம் கொடுக்கச் சொல்கிறார். அதனால் அனு, பல சிக்கல்களுக்கு உள்ளாக, அதைத் தாண்டி அவள் தன் பயணத்தில் வெற்றி அடைந்தாளா? என்பது கதை. இதன் டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.