

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம். தியேட்டர் ரிலீஸ்: ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஜீவா நடித்துள்ள ‘பிளாக்’ திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது. கோபிசந்த் நடித்துள்ள ‘விஸ்வம்’ ( Viswam) தெலுங்கு படம் நாளை (அக்.11) திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. ஆலியா பட் நடித்துள்ள ‘ஜிக்ரா’ பாலிவுட் படத்தை நாளை திரையரங்குகளில் காணலாம். துருவ் சார்ஜாவின் ‘மார்டின்’ கன்னட படம் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.
நேரடி ஓடிடி ரிலீஸ்: எமிலி இயக்கத்தில் உருவான ‘கேர்ள் ஹான்ட் பாய்’ (Girl Haunts Boy) ஹாலிவுட் படத்தை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் காணலாம். சுசன்னா இயக்கியுள்ள ‘லான்லி பிளானட்’ (Lonely Planet) படம் நெட்ஃப்ளிக்ஸில் நேரடியாக வெளியிடப்பட்டுள்ளது.
திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘வாழை’ திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நாளை (அக்.11) வெளியாகிறது. ‘சூரரைப் போற்று’ தமிழ் படத்தின் இந்தி ரீமேக்கான ‘சர்ஃபிரா’ வெள்ளிக்கிழமை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட உள்ளது. விதார்த் நடித்துள்ள ‘லாந்தர்’ திரைப்படம் ஆஹா ஓடிடியில் நாளை வெளியாகிறது. விமலின் ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் தற்போது பார்க்க முடியும். இணையத் தொடர்: மனநலன் குறித்து பேசும் இந்தி ஆந்தாலஜி ‘Zindaginama’ இணையத் தொடர் சோனி லிவ் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.