

சென்னை: பிரபாஸ் நடிப்பில் உருவான ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘கல்கி 2898 ஏடி’. இதில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு சந்தோஷ் நாரயாயணன் இசையமைத்துள்ளார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் ஜூன் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
அறிவியல் - புராண கதைகளை இணைத்து உருவான இப்படம் கிராஃபிக்ஸ் மற்றும் மேக்கிங் காட்சிகளால் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. ஆனால், பலவீனமான திரைக்கதை என்ற விமர்சனங்களும் எழுந்தன. ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது. இந்நிலையில் இப்படம் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தை தெலுங்கு தவிர, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.