'போட்' முதல் 'உள்ளொழுக்கு' வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

'போட்' முதல் 'உள்ளொழுக்கு' வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Updated on
1 min read

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.

தியேட்டர் ரிலீஸ்: யோகிபாபுவின் ‘போட்’, விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’, நகுலின் ‘வாஸ்கோடகமா’, இளையராஜா இசையமைத்துள்ள ‘ஜமா’, ‘பேச்சி’, ஆகிய தமிழ் படங்கள் வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளன. அஜய் தேவ்கனின், ‘ஆரோன் மே கஹா தும் தா’ (Auron Mein Kahan Dum Tha) இந்திப் படம் வெளியாகியுள்ளது. ஜான்வி கபூரின் ‘உலாஜ்’ (ullaj) இந்திப் படம் வெளியிடப்பட்டுள்ளது. பவன் குமாரின் ‘ஆவரேஜ் ஸ்டூடண்ட் நானி’ தெலுங்குப் படத்தை திரையரங்குகளில் காணலாம்.

திரையரங்குகளுக்குப் பிறகான ஓடிடி ரிலீஸ்: எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் ‘ரயில்’ திரைப்படம் ஆஹா ஓடிடியில் காணக்கிடைக்கிறது. பார்வதி, ஊர்வசியின் ‘உள்ளொழுக்கு’ மலையாளத் திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் உள்ளது. டெனிஸ் வில்லனுவேவின் ‘ட்யூன் பார்ட் 2’ ஜியோ சினிமா ஓடிடியில் வெளியிடப்பட்டுள்ளது.

இணையத் தொடர்கள்: ராஜமவுலியின் ‘Modern Masters: SS Rajamouli’ ஆவணத்தொடர் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. த்ரிஷாவின் ‘பிருந்தா’ வெப்சீரிஸை சோனி லிவ் ஓடிடியில் தற்போது காணலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in