‘கருடன்’ முதல் ‘மிர்சாபூர் 3’ வரை - ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்? 

‘கருடன்’ முதல் ‘மிர்சாபூர் 3’ வரை - ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்? 
Updated on
1 min read

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.

தியேட்டர் ரிலீஸ்: நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்துள்ள ‘கவுண்டம்பாளையம்’ திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது. சோனியா அகர்வால், ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ள ‘7ஜி’ படத்தை நாளை திரையரங்குகளில் காணலாம். அறிமுக இயக்குநர் கிஷன்ராஜ் இயக்கியுள்ள ‘எமகாதகன்’ படம் நாளை வெளியாகிறது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘கருடன்’ திரைப்படம் வரும் அமேசான் ப்ரைம் ஓடிடியில் தற்போது காணக்கிடைக்கிறது. பிருத்விராஜ், பசில் ஜோசப் நடித்துள்ள ‘குருவாயூர் அம்பலநடையில்’ மலையாளப் படத்தை ஹாட்ஸ்டார் ஓடிடியில் தற்போது காண முடியும்.

மோகன் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள ‘ஹரா’ திரைப்படம் நாளை ஆஹா ஓடிடியில் வெளியாகிறது.நிவின் பாலியின் ‘மலையாளி ஃப்ரம் இந்தியா’ திரைப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளது.

இணையத் தொடர்: பங்கஜ் திரிபாதியின் ‘மிர்சாபூர்’ வெப்சீரிஸின் 3-வது சீசனை அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெள்ளிக்கிழமை காணலாம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in