‘கல்கி 2898 ஏடி’ முதல் ‘குருவாயூர் அம்பலநடையில்’ வரை- தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்? 

‘கல்கி 2898 ஏடி’ முதல் ‘குருவாயூர் அம்பலநடையில்’ வரை- தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்? 
Updated on
1 min read

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.

தியேட்டர் ரிலீஸ்: பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரோஷன் மாத்யூ நடித்துள்ள ‘பாரடைஸ்’ மலையாளத் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மைக்கல் சர்ணாஸ்கியின் ‘ஏ கோயட் ப்ளேஸ் டே ஒன்’ (A Quiet Place: Day One) ஹாலிவுட் திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது.

ஓடிடி ரிலீஸ்: திவ்யா தத்தாவின் ‘ஷர்மா ஜி கி பேட்டி’ (Sharma Ji Ki Beti) இந்திப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெள்ளிக்கிழமை நேரடியாக வெளியிடப்பட உள்ளது. அலேக்ஸ் கார்லாண்டின் ‘சிவில் வார்’ ஹாலிவுட் திரைப்படம் நாளை அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியாகிறது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: பிருத்விராஜின் ‘குருவாயூர் அம்பலநடையில்’ டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் தற்போது வெளியாகி காணக்கிடைக்கிறது. அமீர் நடித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ளது. நவ்தீப் நடித்துள்ள ‘லவ் மவுலி’ தெலுங்கு படம் ஆஹா ஓடிடியில் இன்று வெளியாகியுளது.

வெப்சீரிஸ்: கிறிஸ்டோஃபர் ஸ்டோரரின் ‘தி பியர்’ (The Bear) வெப்சீரிஸின் 3-வது சீசன் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in