‘வேட்டையன்’ படத்துக்கு பிறகு வெப் தொடர்!

‘வேட்டையன்’ படத்துக்கு பிறகு வெப் தொடர்!

Published on

இயக்குநர் ஞானவேல் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தை முடித்துள்ளார். இதன் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்துவருகின்றன. இதில் அமிதாப்பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சுவாரியர், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். இதையடுத்து அவர் வெப் தொடரை இயக்க இருக்கிறார். ‘வேட்டையன்’ படத்துக்கு முன், ஞானவேல் ‘தோசா கிங்’ என்ற பெயரில் இந்தி படம் இயக்க இருந்தார். இதை இந்தி தயாரிப்பு நிறுவனமான ஜங்கிளி பிக்சர்ஸ் தயாரிக்க இருந்தது. மறைந்த சரவணபவன் ராஜகோபால் - ஜீவஜோதி வழக்கை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக இருப்பதாகக் கூறப்பட்டது.

இதற்கிடையே ஞானவேல், ‘வேட்டையன்’ படத்துக்கு வந்தார். இதை முடித்துவிட்டு அவர், ‘தோசா கிங்’கை வெப் தொடராக இயக்க இருக்கிறார். அதற்குப் பிறகு சூர்யா ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குகிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in