‘ஸ்டார்’ முதல் ‘ஆவேஷம்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

‘ஸ்டார்’ முதல் ‘ஆவேஷம்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Updated on
1 min read

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம். தியேட்டர் ரிலீஸ்: கவின் நடித்துள்ள ‘ஸ்டார்’, அர்ஜூன் தாஸின் ‘ரசவாதி’, அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ ஆகிய தமிழ் படங்கள் மே 10-ம் தேதியான நாளை திரையரங்குகளில் வெளியாகின்றன.

ராஜ்குமார் ராவ், ஜோதிகாவின் ‘ஸ்ரீகாந்த்’ இந்திப் படம் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. ஜோஜூ ஜார்ஜின் ‘ஆரோ’, இந்திரஜித் சுகுமாறனின் ‘மாரிவில்லின் கோபுரங்கள்’ ஆகிய மலையாளப் படங்களை நாளை காணலாம்.

நேரடி ஓடிடி ரிலீஸ்: ப்ரூக் ஷீல்டின் ‘மதர் ஆஃப் தி ப்ரைட்’ (mother of the bride) ஹாலிவுட் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: சவுபின் ஷாயிரின் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ மலையாளப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் காணக்கிடைக்கிறது. ஃபஹத் ஃபாசிலின் ‘ஆவேஷம்’ படத்தை அமேசான் ப்ரைமில் பார்க்கலாம்.

விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ அமேசான் ப்ரைம் தளத்தில் நாளை பார்க்க முடியும். குல்ஷனின் ‘8 ஏ.எம் மெட்ரோ’ (8 A.M. Metro) இந்திப் படத்தை ஜீ5 தளத்தில் வெள்ளிக்கிழமை காணலாம்.

அஞ்சலியின் ‘கீதாஞ்சலி மல்லி வச்சிண்டி’ (Geethanjali Malli Vachindi) தெலுங்கு படம் ஆஹாவில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பால் மெஸ்கல்லின் ‘ஆல் ஆஃப் அஸ் ஸ்ட்ரேஞ்சர்ஸ்’ (All of Us Strangers) ஹாலிவுட் படம் ஹாட்ஸ்டாரில் உள்ளது.

இணைய தொடர்கள்: ஹாலிவுட் க்ரைம் ட்ராமாவான ‘அன்டர் தி பிரிட்ஜ்’ (Under the Bridge) ஹாட்ஸ்டாரில் காணக்கிடைக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in