‘நீதி என்பது யாதெனில்...’ - வசந்தபாலனின் ‘தலைமை செயலகம்’ வெப் சீரிஸ் டீசர் எப்படி?
சென்னை: வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தலைமை செயலகம்’ வெப் சீரிஸின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இயக்குநர் வசந்தபாலன் கடைசியாக ‘அநீதி’ படத்தை இயக்கியிருந்தார். அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது இணையத் தொடர் ஒன்றை இயக்கியுள்ளார். இந்தத் தொடருக்கு ‘தலைமை செயலகம்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இதில், கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, பரத், ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், கவிதா பாரதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ராதிகா சரத்குமார் தயாரிக்கும் இத்தொடரை ஜீ5 ஓடிடி நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில், இந்தத் தொடரின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
டீசர் எப்படி? - டீசரின் தொடக்கத்தில் அரசியல் கட்சிகளின் சண்டையும், கட்சிக்கொடியும் காட்டப்படுகிறது. பின்னர் கிஷோர் குரலில், “நீதின்னா என்னான்னு தெரியுமா... செஞ்ச தப்புக்கு தண்டன வாங்கி தர்றதா? தப்பே செய்ய கூடாதுங்குற பயத்த ஏற்படுத்துறதா? எதுவா இருந்தாலும் பாதிக்கப்பட்டவங்க பக்கம் நிக்கிறதுதான் நீதி” என வசனம் ஒலிக்கிறது.
நடுவில் வன்முறை, போராட்ட காட்சிகள் வந்து செல்கின்றன. வசனம் அழுத்தமாகவே எழுதப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க அரசியல், மக்கள், போராட்டம் என்ற ரீதியில் பயணிக்கும் டீசர் தொடர் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த
த் தொடர் வரும் 17-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டீசர் வீடியோ:
