ஜி.வி.பிரகாஷின் ‘டியர்’ ஞாயிற்றுக்கிழமை ஓடிடியில் ரிலீஸ் 

ஜி.வி.பிரகாஷின் ‘டியர்’ ஞாயிற்றுக்கிழமை ஓடிடியில் ரிலீஸ் 
Updated on
1 min read

சென்னை: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘டியர்’ திரைப்படம் நாளை(ஏப்.28) ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘செத்தும் ஆயிரம் பொன்’ படத்தின் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள படம் ‘டியர்’. ஐஸ்வர்யா ராஜேஷ், காளி வெங்கட், இளவரசு, ரோஹிணி, ‘தலைவாசல்’ விஜய், கீதா கைலாசம், ‘பிளாக் ஷீப்’ நந்தினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.குறட்டை பிரச்சினையை மையப்படுத்தி உருவான இப்படம் கடந்த ஏப்.11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஒருமாதம் கூட நிறைவடையாத நிலையில், 17 நாட்களுக்குப் பின் ஓடிடியில் வெளியாக உள்ளது. அதன்படி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் படம் நாளை வெளியிடப்பட உள்ளது. > விமர்சனத்தை வாசிக்க: டியர் - திரை விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in