

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி தொடர்களில் ஒன்று, குக் வித் கோமாளி. கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கிய இந்த தொடர் ஆரம்பம் முதலே வரவேற்பைப் பெற்றது. நான்கு சீசன்களாக பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்ற இந்த தொடரின் 5 வது சீசன், தற்போது உருவாகியுள்ளது.
சில புதிய பகுதிகளுடன் உருவாகியுள்ள இந்த சீசனில் குக்காக, யூடியூபர் இர்பான், வசந்த் வசி, நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே, நடிகர் விடிவி கணேஷ், சீரியல் நடிகை சுஜிதா, நடிகை ஷாலின் சோயா, நடிகர் அக் ஷய் கமல், நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பாடகி பூஜா வெங்கட் பங்கேற்கின்றனர். நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ், செஃப் தாமு பங்கேற்கின்றனர்.
கோமாளிகளாக, புகழ், சுனிதா, வினோத், ராமர், குரேஷி, சரத், நாஞ்சில் விஜயன், ஷப்னம், அன்சிதா, கேமி, ஷாலின் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சியை ரக்ஷன், மணிமேகலை தொகுத்து வழங்குகின்றனர். இந்த தொடர் இன்று (சனிக்கிழமை) முதல் ஒவ்வொரு சனி, ஞாயிறுகளில் இரவு 9.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.