‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ மே 5-ல் ஓடிடியில் ரிலீஸ்!

‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ மே 5-ல் ஓடிடியில் ரிலீஸ்!
Updated on
1 min read

சென்னை: மலையாளத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பை பெற்ற ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்படம் வரும் மே 5-ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது.

கடந்த பிப்ரவரி 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தை சிதம்பரம் எஸ் பொடுவால் இயக்கியுள்ளார். சவுபின் ஷாயிர், ஸ்ரீநாத் பாஷி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். சவுபின் ஷாயிர், பாபு ஷாயிர், ஷான் ஆண்டனி ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு குறைந்த பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.200 கோடி வசூலைத் தாண்டியுள்ளது. மலையாளத்தில் அதிகபட்ச வசூலை குவித்த படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது.

‘குணா’ படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும்’ பாடல் இப்படத்தில் இடம்பெற்றிருந்தது தமிழ் ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், இப்படம் வரும் மே 5-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in