

சென்னை: டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில், 'உப்பு புளி காரம்' என்ற புதிய சீரிஸ் வெளியாக இருக்கிறது. இதில் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா உட்பட பலர் நடித்துள்ளனர். விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ள இந்த சீரிஸை எம். ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். நவீன தலைமுறையின் காதல் மற்றும் உறவுகள் பற்றிய கதையுடன், உருவாகியிருக்கும் இது இளைஞர்களுக்குப் பெரும் விருந்தாக அமையும் என்கிறார்கள். ஷேக் இசையமைத்துள்ளார். பார்த்திபன், சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த தொடரின் முதல் தோற்றத்தை இப்போது வெளியிட்டுள்ளனர்.