‘சைரன்’ முதல் ‘கில்லி’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

‘சைரன்’ முதல் ‘கில்லி’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Updated on
1 min read

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.

தியேட்டர் ரிலீஸ்: தேஜ் சரண்ராஜின் ‘வல்லவன் வகுத்ததடா’, சார்லியின் ‘ஃபின்டர்’, மற்றும் ‘சிறகன்’ ஆகிய தமிழ் படங்கள் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகின்றன. விஜய்யின் ‘கில்லி’ ஏப்ரல் 20-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

உன்னி முகுந்தனின் ‘ஜெய் கணேஷ்’ மலையாள படத்தையும், வித்யா பாலனின் ‘தோ அவர் தோ ப்யார்’ (Do Aur Do Pyaar) இந்திப் படத்தையும் நாளை திரையரங்குகளில் காணலாம். அலெக்ஸ் கார்லேண்ட்டின் ‘சிவில் வார்’ ஹாலிவுட் படம் நாளை வெளியிடப்பட உள்ளது.

நேரடி ஓடிடி ரிலீஸ்: அசோக் செல்வன், வசந்த் ரவியின் ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் ஜியோ சினிமா ஓடிடியில் நேரடியாக வெளியிடப்பட்டு தற்போது காணக் கிடைக்கிறது. மனோஜ் பாஜ்பாயின் ‘சைலன்ஸ் 2’ (Silence 2) ஜீ5 ஓடிடியில் வெளியாகியுள்ளது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: ஜெயம் ரவியின் ‘சைரன்’ ஹாட்ஸ்டார் ஓடிடியில் நாளை வெளியிடப்பட உள்ளது. வைபவின் ‘ரணம் அறம் தவறேல்’ அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. சமுத்திரகனியின் ‘யாவரும் வல்லவரே’ படத்தை ஆஹா ஓடிடியில் நாளை காணலாம்.

இணைய தொடர்: ராபர்ட் டவுனி ஜூனியரின் ‘தி சிம்பதைஸர்’ (The Sympathizer) இணையத் தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் தற்போது காண முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in