‘கள்வன்’ முதல் ‘ஃபேமிலி ஸ்டார்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

‘கள்வன்’ முதல் ‘ஃபேமிலி ஸ்டார்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Updated on
1 min read

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.

தியேட்டர் ரிலீஸ்: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘கள்வன்’ இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ‘வொயிட் ரோஸ்’, ‘வல்லவன் வகுத்ததடா’, ‘டபுள் டக்கர்’, ‘ஒரு தவறு செய்தால்’, ‘ஆலகாலம்’, ‘இரவின் கண்கள்’ ஆகிய தமிழ் படங்கள் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது.

விஜய் தேவரகொண்டாவின் ‘ஃபேமிலி ஸ்டார்’ படத்தை நாளை காணலாம். தவிர, ‘லவ் லைஸ் ப்ளீடிங்’ (love lies bleeding), ‘தி ஃபர்ஸ்ட் ஓமன்’ (The first omen) ஹாலிவுட் படங்கள் நாளை வெளியிடப்பட உள்ளன.

நேரடி ஓடிடி ரிலீஸ்: பிலிப் மார்ட்டினின் ‘ஸ்கூப்’ (Scoop) ஹாலிவுட் படம் நெட்ஃப்ளிக்ஸில் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: அபினவ்வின் ‘கிஸ்மத்’ தெலுங்கு படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கிறது. காதல் படமான லம்பாசிங்கி (Lambasingi) தெலுங்கு படம் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகிறது. த்ரில்லர் படமான (இந்தி) ‘ஃபர்ரே’ (Farrey) ஜீ5 ஓடிடியில் நாளை வெளியிடப்பட உள்ளது.

இணைய தொடர்கள்: அபூர்வா அரோராவின் ‘ஃபேமிலி ஆஜ் கல்’ (Family Aaj Kal) இந்தி தொடர் சோனி லிவ் ஓடிடியில் காண கிடைக்கிறது. ‘ஏ ஜென்டில்மேன் இன் மாஸ்கோ’ (A Gentleman in Moscow) ஹாலிவுட் தொடரை அமேசான் ப்ரைம் ஓடிடியில் தற்போது காண முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in