‘காடுவெட்டி’ முதல் ‘பிரமயுகம்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

‘காடுவெட்டி’ முதல் ‘பிரமயுகம்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

Published on

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.

தியேட்டர் ரிலீஸ்: ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள ‘காடுவெட்டி’, சமுத்திரகனியின் ‘யாவரும் வல்லவரே’, மாஸ்டர் மகேந்திரனின் ‘அமீகோ கேரேஜ்’ ஆகிய தமிழ்ப் படங்கள் வெள்ளிக்கிழமை வெளியாகின்றன. மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்து வரும் ‘பிரேமலு’ தமிழ் வெர்ஷன் நாளை (மார்ச் 15) வெளியிடப்பட உள்ளது.

பாபி சிம்ஹாவின் ‘ரஸாகர்’ தெலுங்கு படத்தையும், சித்தார்த் மல்ஹோத்ராவின் ‘யோதா’ (Yodha) இந்திப் படத்தையும் திரையரங்குகளில் நாளை காண முடியும். மைக் மிட்செல்லின் ‘குங் ஃபூ பாண்டா 4’ (Kung Fu Panda 4) ஹாலிவுட் அனிமேஷன் படம் நாளை வெளியிடப்பட உள்ளது.

நேரடி ஓடிடி ரிலீஸ்: ஆதர்ஷ் நடித்துள்ள ‘மிக்ஸ் அப்’ (mix up) தெலுங்கு படத்தை ஆஹா ஓடிடியில் வெள்ளிக்கிழமை பார்க்கலாம். சாரா அலிகான், பங்கஜ் திரிபாதியின் ‘மர்டர் முபாரக்’ (Murder Mubarak) இந்திப் படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியிடப்பட உள்ளது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: மம்மூட்டியின் ‘பிரமயுகம்’ சோனி ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது. சந்தானத்தின்ராம ‘வடக்குப்பட்டி ராமசாமி’ தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.

பங்கஜ் திரிபாதியின் ‘மை அடல் ஹீன்’ (Main Atal Hoon) இந்திப் படத்தை ஜீ5 ஓடிடியில் தற்போது பார்க்கலாம். வினய் ஃபோர்டின் ‘ஆட்டம்’ மலையாள படம் அமேசான் ப்ரைம் தளத்தில் காணக்கிடைக்கிறது.

இணைய தொடர்கள்: அருண் கொத்தப்பள்ளியின் ‘சேவ் டைகர் 2’ (Save The Tigers 2) தெலுங்கு இணையத் தொடர் நாளை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நாளை வெளியிடப்பட உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in