மணிகண்டனின் ‘லவ்வர்’ மார்ச் 27-ல் ஓடிடியில் ரிலீஸ்!
சென்னை: மணிகண்டன் நடித்துள்ள ‘லவ்வர்’ திரைப்படம் வரும் மார்ச் 27-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன் நடித்துள்ள படம் ‘லவ்வர்’ (lover). ஸ்ரீகெளரி பிரியா, கண்ணா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்ட்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர். கடந்த பிப்ரவரி 9-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் டாக்ஸிக் காதலை பேசியது.
இந்நிலையில், இப்படம் வரும் மார்ச் 27-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
