ஜெயராமின் ‘ஆபிரகாம் ஓஸ்லர்’ மார்ச் 20-ல் ஓடிடியில் ரிலீஸ்!

ஜெயராமின் ‘ஆபிரகாம் ஓஸ்லர்’ மார்ச் 20-ல் ஓடிடியில் ரிலீஸ்!
Updated on
1 min read

சென்னை: ஜெயராம் நடித்துள்ள ‘ஆபிரகாம் ஓஸ்லர்’ திரைப்படம் வரும் மார்ச் 20-ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது.

‘ஆடு’, ‘ஆடு 2’, ‘அஞ்சாம் பதிரா’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த முண்ணனி மலையாள இயக்குநர் மிதுன் மானுவேல் தாமஸ். இவரது இயக்கத்தில் ஜெயராம் நடிப்பில் கடந்த ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியான மலையாள படம் ‘ஆபிரகாம் ஓஸ்லர்’. மெடிக்கல் க்ரைம் கதைக்களத்தை அடிப்படையாக கொண்ட இப்படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். மிதுன் முகுந்தன் இசையமைத்துள்ளார்.

இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ரூ.10 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலகம் முழுவதும் ரூ.40 கோடி வசூலை ஈர்த்தது. இந்நிலையில் இப்படம் வரும் மார்ச் 20-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in