‘சைரன்’ முதல் ‘சபா நாயகன்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

‘சைரன்’ முதல் ‘சபா நாயகன்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Updated on
1 min read

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.

தியேட்டர் ரிலீஸ்: ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘சைரன்’ திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. மம்மூட்டியின் ‘பிரமயுகம்’ மலையாள படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி தற்போது காணக் கிடைக்கிறது. சந்தீப் கிஷன் நடித்துள்ள ‘ஊரு பெரு பைரவகோனா’ (Ooru Peru Bhairavakona) தெலுங்கு படம் நாளை (பிப்.16) திரையரங்குகளில் வெளியாகிறது. பிஜுமேனனின் ‘துண்டு’ மலையாள படத்தை நாளை காணலாம். மார்வல் காமிக்ஸின் சூப்பர் ஹீரோ படமான ‘மேடம் வெப்’ (Madame Web) ஹாலிவுட் படம் நாளை வெளியிடப்பட உள்ளது.

நேரடி ஓடிடி ரிலீஸ்: பிரியாமணி நடித்துள்ள ‘பாமாகலபம் 2’ (bhamakalapam 2) திரைப்படம் ஆஹா ஓடிடியில் நாளை (பிப்.16) வெளியாகிறது. ஜினா ரோட்ரிக்ஸின் ‘ப்ளேயர்ஸ்’ ஹாலிவுட் படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி தற்போது காணக் கிடைக்கிறது. ஜெனிஃபர் லோஃபஸின் ‘தி இஸ் மி நவ்: ஏ லவ் ஸ்டோரி’ (This Is Me Now: A Love Story) ஹாலிவுட் படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் நாளை காண முடியும்.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: அசோக் செல்வனின் ‘சபா நாயகன்’ படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நேற்று (பிப்.14) வெளியாகி தற்போது காணக் கிடைக்கிறது. ஷாருக்கானின் ‘டன்கி’ படம் இன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது. மீரா ஜாஸ்மின், நரேனின் ‘குயின் எலிசபெத்’ மலையாள படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் காண முடியும். ஜித்தன் ரமேஷின் ‘ரூட் நம்பர் 17’ அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நாளை வெளிடப்பட உள்ளது.

இணைய தொடர்கள்: புதுமுகங்கள் நடித்துள்ள ‘வேற மாதிரி ஆஃபீஸ்’ தொடர் ஆஹா ஓடிடி தளத்தில் தற்போது காணக் கிடைக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in