‘வடக்குப்பட்டி ராமசாமி’ முதல் ‘சைந்தவ்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

‘வடக்குப்பட்டி ராமசாமி’ முதல் ‘சைந்தவ்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Updated on
1 min read

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.

தியேட்டர் ரிலீஸ்: சந்தானம் நடித்துள்ள ‘வடக்குப்பட்டி ராமசாமி’, விதார்த்தின் ‘டெவில்’, ரக்‌ஷன் நடித்துள்ள ‘மறக்குமா நெஞ்சம்’ ஆகிய படங்கள் நாளை (பிப்.2) திரையரங்குகளில் வெளியாகின்றன. சுஹாஸ் நடித்துள்ள ‘அம்பஜிபேடா மேரேஜ் பேண்ட்’ (Ambajipeta Marriage Band) தெலுங்கு படம் நாளை வெளியிடப்பட உள்ளது.

ஜஸ்டின் ட்ரைட் இயக்கியுள்ள ‘அனாடமி ஆஃப் எ ஃபால்’ (Anatomy of a Fall) ஹாலிவுட் படத்தை வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் காணலாம். இப்படம் ஆஸ்கர் விருது நாமினேஷனில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

நேரடி ஓடிடி ரிலீஸ்: மிமி கீன் நடித்துள்ள ‘ஆஃப்டர் எவ்ரிதிங்’ (After Everything) நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி தற்போது காணக் கிடைக்கிறது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: வெங்கடேஷ் டகுபதி, நவாசுதீன் சித்திக் நடித்துள்ள ‘சைந்தவ்’ தெலுங்கு படம் பிப்வரி 3-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. வெங்கட் செங்குட்டுவன், இவானாவின் ‘மதிமாறன்’ அமேசான் ப்ரைமில் தற்போது காணக்கிடைக்கிறது. ஸ்ரீகாந்த்தின் ‘பிண்டம்’ தெலுங்கு படத்தை ஆஹா ஓடிடி தளத்தில் நாளை காணலாம்.

இணைய தொடர்கள்: லாவண்யா திரிபாதி நடித்துள்ள ‘மிஸ் பர்ஃபெக்ட்’ தெலுங்கு வெப்சீரிஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நாளை வெளியிடப்பட உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in