பிரமாண்ட மேக்கிங்: கவனம் ஈர்க்கும் பன்சாலியின் ‘ஹீராமண்டி’ சீரிஸ் முதல் பார்வை

பிரமாண்ட மேக்கிங்: கவனம் ஈர்க்கும் பன்சாலியின் ‘ஹீராமண்டி’ சீரிஸ் முதல் பார்வை
Updated on
1 min read

மும்பை: சஞ்சய் லீலா பன்சாலியின் ‘ஹீராமண்டி: தி டைமன்ட் பஜார்’ (Heeramandi: The Diamond Bazaar) வெப் சீரிஸின் முதல் பார்வை பிரமாண்ட காட்சி அமைப்புகளுடன் கவனம் ஈர்த்து வருகிறது.

பாலிவுட் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் சஞ்சய் லீலா பன்சாலி. கடந்த 2022-ம் ஆண்டு ஆலியா பட் நடிப்பில் உருவான ‘கங்குபாய் காதிவாடி’ படத்தை இயக்கினார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் வெப் சீரிஸ் ஒன்றை இயக்குகிறார். ‘ஹீராமண்டி: தி டைமன்ட் பஜார்’ (Heeramandi: The Diamond Bazaar) என பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடர் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

மனிஷா கொய்ராலா, சோனாக்‌ஷி சின்ஹா, அதிதி ராவ் ஹைதாரி, ரிச்சா சதா, ஷர்மின் சேகல் மற்றும் சஞ்சீதா ஷேக் உள்ளிட்ட பெரும் நடிகர் பட்டாளமே இதில் நடித்துள்ளது. சுதந்திரத்துக்கு முந்தைய காலக்கட்டத்தில் நடக்கும் கதையாக ‘ஹீராமண்டி: தி டைமன்ட் பஜார்’ உருவாகியுள்ளது. இந்நிலையில், தற்போது இதன் முதல் பார்வை வீடியோ வெளியாகியுள்ளது.

முதல் பார்வை வீடியோ எப்படி? - பிரம்மிப்பூட்டும் அரண்மனைகள், வைர ஆபரணங்களுடன் கூடிய அலங்கார உடைகள், ஈர்க்கும் காட்சி அமைப்புகள் என பிரமாண்ட வெப் சீரிஸ் ஒன்றை பன்சாலி உருவாக்கியிருப்பதை வீடியோ உணர்த்துகிறது. சுதந்திரத்துக்கு முந்தைய காலக்கட்டத்தில் நடைபெறும் பீரியட் டிராமா கதைக்களத்தில் உருவாகும் இந்தத் தொடர் இளம் வாரிசுகளுக்கிடையிலான அதிகார மோதல்களை அடிப்படையாக கொண்டது. மனிஷா கொய்ராலா, சோனாக்‌ஷி சின்ஹா, அதிதி ராவ் மூன்று பேரையும் ஒரே வெப் சீரிஸில் பார்ப்பது தொடர் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. ‘ஹீராமண்டி’ விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேதி குறிப்பிடப்படவில்லை. முதல் பார்வை வீடியோ:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in