Published : 17 Jan 2024 08:45 PM
Last Updated : 17 Jan 2024 08:45 PM

‘தங்கலான்’ முதல் ‘இந்தியன் 2’ வரை: நெட்ஃப்ளிக்ஸ் வசப்படுத்திய ஓடிடி ரைட்ஸ் பட்டியல்

சென்னை: இந்த ஆண்டு வெளியாக உள்ள 8 படங்களின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் காணக்கிடைக்கும் நிலையில், அதையும் சேர்த்து மொத்தம் 9 படங்களின் உரிமத்தை பெற்றுள்ளது நெட்ஃப்ளிக்ஸ்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளன. இதில் பல படங்களில் வெளியீட்டு தேதி கூட இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு திரையரங்குகளுக்குப் பின் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் படங்களின் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

முன்னதாக, திரையரங்க உரிமையாளர்கள், இப்படியான அறிவிப்புகள் தங்களுக்கான பார்வையாளர்களின் வரத்தை பாதிக்கும் என கூறியிருந்த நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் தற்போது 2024-ல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் அனைத்து படங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட பட்டியல்:

  • கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’
  • பா.ரஞ்சித்தின் ‘தங்கலான்’
  • அஜித்தின் ‘விடாமுயற்சி’
  • சிவகார்த்திகேயனின் ‘எஸ்கே21’
  • கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீடா’
  • விஜய் சேதுபதியின் ‘மஹாராஜா’
  • ஆர்.ஜே.பாலாஜினிய்ன ‘சொர்க்கவாசல்’
  • கீர்த்தி சுரேஷின் ‘கண்ணிவெடி’
  • சதீஷின் ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x