ரியோ ராஜின் ‘ஜோ’ திங்கள்கிழமை ஓடிடியில் வெளியீடு

ரியோ ராஜின் ‘ஜோ’ திங்கள்கிழமை ஓடிடியில் வெளியீடு
Updated on
1 min read

சென்னை: ரியோ ராஜ் நடித்துள்ள ‘ஜோ’ திரைப்படம் நாளை (ஜன.15) ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் நடித்துள்ள படம் ‘ஜோ’. இப்படத்தை அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மாளவிகளா மனோஜ், பவ்யா த்ரிகா, சார்லி, அன்புதாசன், ஏகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு சித்துகுமார் இசையமைத்துள்ளார். காதல் கதையை மையமாக கொண்டு உருவான இப்படம் கடந்த நவம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

தொடக்கத்தில் சுணக்கத்தை சந்தித்தாலும், போக போக படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இப்படம் இயக்குநரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவானது. இந்நிலையில் இப்படம் நாளை (ஜன.15) ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in