

மும்பை: மனோஜ் பாஜ்பாய், கொங்கனா சென் சர்மா, நாசர், சாயாஜி ஷிண்டே, லால், அன்புதாசன் உட்பட பலர் நடித்துள்ள வெப் தொடர், ‘கில்லர் சூப்’. இந்தியில் இஷ்கியா, உட்தா பஞ்சாப், உட்பட சில படங்களை இயக்கிய அபிஷேக் சவுபே இயக்கியுள்ளார். சேத்தனா கவுசிக், ஹனி டிரேகன் தயாரித்துள்ள இந்த தொடரில் மனோஜ் பாஜ்பாய் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “ முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளேன். இது பிளாக் காமெடி கிரைம் திரில்லர் தொடர்” என்றார். இந்தத் தொடருக்கு முதலில் சூப் என்று தலைப்பு வைத்திருந்தனர். இப்போது கில்லர் சூப் என்று மாற்றியுள்ளார். இந்த வெப்தொடர் நெட்பிளிக்ஸ் தளத்தில் வரும் 11ம் தேதி வெளியாகிறது