

சென்னை: தமிழ், மலையாள படங்களில் நடித்து வரும் ரஹ்மான், ‘கண்பத்’ படம் மூலம் இந்திக்கும் சென்றார். சினிமாவில் அறிமுகமாகி 40 வருடத்தைக் கடந்துவிட்ட ரஹ்மான், முதன்முதலாக வெப் தொடரில் நடிக்கிறார். ‘1000 பேபிஸ்’ என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் தொடரை, நஜிம் கோயா இயக்குகிறார். ஹாட் ஸ்டார் தளத்துக்காக உருவாகும் இத்தொடர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் பிரபல இந்தி நடிகை நீனா குப்தா நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார். ரஹ்மான், இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.