சித்தார்த்தின் ‘சித்தா’ படம் நவ.28-ல் ஓடிடியில் ரிலீஸ்

சித்தார்த்தின் ‘சித்தா’ படம் நவ.28-ல் ஓடிடியில் ரிலீஸ்
Updated on
1 min read

சென்னை: நடிகர் சித்தார்த் நடிப்பில் திரையரங்குகளில் வரவேற்பை பெற்ற ‘சித்தா’ திரைப்படம் வரும் நவம்பர் 28-ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது.

நடிகர் சித்தார்த் தனது இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்துள்ள படம் ‘சித்தா’. இதை ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ளார். திபு நினன் தாமஸ் இசை அமைத்துள்ளார். நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்தது. குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்த அழுத்தமான கதைகளத்தை கொண்டிருந்த இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. ரூ.5 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் ரூ.25 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், இப்படம் வரும் நவம்பர் 28-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in