Published : 26 Oct 2023 01:12 PM
Last Updated : 26 Oct 2023 01:12 PM

நவ.21 ஓடிடியில் வெளியாகிறது ‘லியோ’ - ஆனால் இது வேறு ‘லியோ’

ராபர்ட் ஸ்மீகல், டேவிட் வாட்ச்டென்ஹெய்ம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லியோ’ அனிமேஷன் திரைப்படம் வரும் நவம்பர் 21ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறது.

ராபர்ட் ஸ்மீகல், ராபர்ட் மரியானெட்டி, டேவிட் வாட்ச்டென்ஹெய்ம் ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள அனிமேஷன் படம் ‘லியோ’. இப்படத்தின் பிரதான கதாபாத்திரமான ‘லியோ’ என்ற பல்லிக்கு ஆடம் சாண்ட்லர் குரல் கொடுத்துள்ளார். ஸ்க்விர்டில் என்ற ஆமைக்கு பில் பர்ர் குரல் கொடுத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இப்படம் வரும் நவம்பர் 21ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

இந்த நிலையில், ‘லியோ’ படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது என்றதும், லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம்தான் ஓடிடியில் வெளியாகிறது என்று எண்ணி பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் ‘லியோ’ என்ற தலைப்பு இடம்பெற்றதால் நெட்டிசன்கள் மத்தியில் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x