‘சுழல் 2’ வெப் சீரிஸில் நடிகை கவுரி கிஷன்

‘சுழல் 2’ வெப் சீரிஸில் நடிகை கவுரி கிஷன்
Updated on
1 min read

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற இணையத் தொடரான ‘சுழல்’ தொடரின் இரண்டாம் பாகத்தில் நடிகை கவுரி கிஷன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இயக்குநர் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் உருவான இந்தத் தொடர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. இதில் பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரீ ரெட்டி, இளங்கோ குமரவேல், நிவேதிதா சதீஷ், ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மலைக் கிராமத்தில் காணாமல் போன சிறுமியை தேடும் க்ரைம் த்ரில்லர் கதையாக உருவான இத்தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த வரவேற்பைத் தொடர்ந்து தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளது. இதில் நடிகை கவுரி கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தவிர, கவுரி கிஷன் ‘லவ் அன்டர் கன்ஸ்ட்ரக்‌ஷன்’ (Love Under Construction) என்ற வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். இந்த தொடரை ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in