

ஸ்குவிட் கேம்: தி சாலஞ்ச் (Squid Game: The Challenge) ரியாலிட்டி சீரிஸின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது நெட்ஃப்ளிக்ஸ். இதோடு அதன் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 456 போட்டியாளர்கள் 4.56 மில்லியன் டாலர் பரிசு தொகையை வெல்லும் நோக்கில் இதில் பங்கேற்றுள்ளனர்.
வரும் நவம்பர் 22-ம் தேதி அன்று இந்த சீரிஸ் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. ட்ரெய்லரை பார்த்து வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை நிமிடத்துக்கு நிமிடம் கூடிக் கொண்டே உள்ளது. கொரியாவின் ‘ஸ்குவிட் கேம்’ வெப் சீரிஸின் இன்ஸ்பிரேஷனாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள சவால்கள் வழக்கம்போல சர்ப்ரைஸ் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேம் ஒவ்வொரு கட்டமாக முன்னேற்றம் காணும்போது போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள்.
தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் இதில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஒருங்கிணைக்க பல்வேறு சிக்கல்களை தயாரிப்புக் குழு சந்தித்திருந்தது. ஏற்கெனவே ஸ்குவிட் கேம் ஷோவை பார்த்து ரசித்த ரசிகர்கள் இதனை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். கடந்த 2021-ல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஸ்குவிட் கேம் வெளியாகி, பரவலான வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.