‘ஆர் யு ஓகே பேபி’ முதல் ‘செக்ஸ் எஜுகேஷன்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

‘ஆர் யு ஓகே பேபி’ முதல் ‘செக்ஸ் எஜுகேஷன்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Updated on
1 min read

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸான படங்கள் குறித்து பார்ப்போம்.

தியேட்டர் ரிலீஸ்: லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் சமுத்திரகனி நடித்துள்ள ‘ஆர் யு ஓகே பேபி’ (Are you ok baby) படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சச்சின் மணி நடித்துள்ள ‘டீமன்’, ‘கடத்தல்’, ‘ஏய்மா’ படங்களை திரையரங்குகளில் காணலாம். விக்கி கவுஷலின் ‘தி க்ரேட் இந்தியன் ஃபேமிலி’ (The Great Indian Family) இந்தி படமும், ஜேசன் ஸ்டாத்தம் நடித்துள்ள ‘Expend4bles’ ஹாலிவுட் படமும் இன்று வெளியாகியுள்ளது.

நேரடி ஓடிடி ரிலீஸ்: கரீனா கபூரின் ‘ஜானே ஜான்’ இந்திப் படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: ரிஷி ரித்விக் நடித்துள்ள ‘டைனோசர்ஸ்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் காண கிடைக்கிறது. ரன்வீர் சிங்கின் ‘ராக்கி அவர் ராணி கி பிரேம் கஹானி’ (Rocky Aur Rani Kii Prem khahani) இந்திப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. வின் டீசல் நடித்துள்ள ‘ஃபாஸ்ட் எக்ஸ்’ படத்தை ஜீயோ சினிமாவில் பார்க்கலாம்.

இணைய தொடர்கள்: நெட்ஃப்ளிக்ஸின் பிரபல வெப் சீரிஸான ‘செக்ஸ் எஜுகேஷன்’ 4-வது சீசன் வெளியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in