‘கிக்’ முதல் ‘ஸ்கேம் 2003’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

‘கிக்’ முதல் ‘ஸ்கேம் 2003’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Updated on
1 min read

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.

தியேட்டர் ரிலீஸ்: சந்தானம் நடித்துள்ள ‘கிக்’, யோகிபாபுவின் ‘லக்கிமேன்’, தங்கர்பச்சானின் ‘கருமேகங்கள் கலைகின்றன’, சரத்குமாரின் ‘பரம்பொருள்’, ‘ரங்கோலி’ உள்ளிட்ட தமிழ் படங்கள் நாளை (செப்.1) திரையரங்குகளில் வெளியாகின்றன. தவிர்த்து, விஜய் தேவரகொண்டா - சமந்தா நடித்துள்ள ‘குஷி’ தெலுங்கு படமும் நாளை வெளியாகிறது. ஆண்டனி ஃபுக்கா இயக்கியுள்ள ‘ஈக்குவலைசர் 3’ (Equaliser 3) ஹாலிவுட் படம் நாளை வெளியாகிறது.

நேரடி ஓடிடி ரிலீஸ்: வாட்சால் நீலகண்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்திப் படம் ‘ஃப்ரைடே நைட் ப்ளான்’ (Friday Night Plan) நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை காணக்கிடைக்கும்.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: சந்தானத்தின் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை பார்க்கலாம். அதேபோல பரத், வாணிபோஜன் நடித்த ‘லவ்’ திரைப்படம் ஆஹா ஓடிடியில் நாளை வெளியாகிறது. செம்பன் வினோத்தின் ‘நல்ல நிலவுல்ல ராத்திரி’ (Nalla Nilavulla Rathri) மலையாள படம் அமேசான் ப்ரைம் தளத்தில் தற்போது காணக்கிடைக்கிறது.

இணைய தொடர்கள்: ‘ஸ்கேம் 2003: தி தெல்கி ஸ்டோரி’ ( Scam 2003: The Telgi Story - Hindi) சோனிலிவ் ஓடிடி தளத்திலும் மற்றும் ‘தி ஃப்ரீலேன்சர்’ (The Freelancer - Hindi) ஹாட்ஸ்டார் தளத்திலும் நாளை வெளியிடப்பட உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in