ஹாட் ஸ்டாரில் ‘கிடாரி’ இயக்குநரின் ‘மத்தகம்’
சென்னை: சசிகுமார், வேல ராமமூர்த்தி நடித்த ‘கிடாரி’ படத்தை இயக்கியவர் பிரசாத் முருகேசன். இவர் இயக்கியுள்ள வெப் தொடர் ‘மத்தகம்’. அதர்வா, மணிகண்டன், நிகிலா விமல், டிடி, இளவரசு , கவுதம் வாசுதேவ் மேனன், தில்னாஸ் இராணி, வடிவுக்கரசி உட்பட பலர் நடித்துள்ளனர். ஆக. 18 முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உட்பட 7 மொழிகளில் இந்த வெப் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
இதில், ‘ஜெய்பீம்’ மணிகண்டன் வில்லனாகவும் அதர்வா போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளனர். ஸ்கீரின் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த வெப் சீரிஸுக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த தொடரின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இந்த தொடருக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. ‘மத்தகம்’ ட்ரெய்லர் வீடியோ:
