

பசுபதி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘தண்டட்டி’ திரைப்படம் ஜூலை 14-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் ராம் சங்கய்யா இயக்கத்தில் கடந்த ஜூன் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘தண்டட்டி’. இந்தப் படத்தை ‘சர்தார்’, ‘ரன் பேபி ரன்’ படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பசுபதி, ரோஹினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.
சாம்.சி.எஸ் பின்னணி இசையில் உருவாகியுள்ள இப்படத்துக்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படம் வரும் ஜூலை 14-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமர்சனத்தை வாசிக்க: திரை விமர்சனம்: தண்டட்டி