‘பம்பர்’ முதல் ‘ஸ்வீட் காரம் காஃபி’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

‘பம்பர்’ முதல் ‘ஸ்வீட் காரம் காஃபி’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Updated on
1 min read

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.

தியேட்டர் ரிலீஸ்: முனீஷ்காந்த், காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘காடப்புறா கலைக்குழு’ நாளை (ஜூலை 7) திரையரங்குகளில் வெளியாகிறது. வெற்றி, ஷிவானி நடித்துள்ள ‘பம்பர்’, கிருஷ்ணா நடித்துள்ள ‘ராயர் பரம்பரை’, ஹரி உத்ரா இயக்கியுள்ள ‘வில்வித்தை’, நட்டி நடித்துள்ள ‘இன்பினிட்டி’ ஆகிய தமிழ் படங்களை நாளை திரையரங்குகளில் காணலாம். அனுமேனன் இயக்கத்தில் வித்யாபாலன் நடித்துள்ள ‘நியத்’ (Neeyat) இந்தி படம் திரையரங்குகளில் நாளை வெளியிடப்பட உள்ளது.

நேரடி ஓடிடி ரிலீஸ்: ஹுமா குரேஷி நடித்துள்ள ‘தர்லா’ (Tarla) ஜீ5 ஓடிடியில் நாளை வெளியாக உள்ளது. சோனம் கபூரின் ‘ப்ளைன்ட்’ (Blind) நேரடியாக ஜியோ சினிமா ஓடிடி செயலில் நாளை வெளியாகிறது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: மணிகண்டன் நடித்துள்ள ‘குட் நைட்’ திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் தற்போது காணக்கிடைக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷின், ‘ஃபர்ஹானா’ படத்தை சோனி லிவ் ஓடிடி தளத்தில் நாளை காணமுடியும். முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ ஜீ5 ஓடிடியில் நாளை வெளியாகிறது. சித்தார்த்தின் ‘டக்கர்’ நெட்ஃப்ளிக்ஸில் வெளியிடப்பட உள்ளது. சாண்டி நடித்துள்ள ‘3.33’ படத்தை ஆஹா ஓடிடியில் நாளையில் பார்க்கலாம்.

இணையதள தொடர்: லக்‌ஷ்மி, மது, சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘ஸ்வீட் காரம் காஃபி’ வெப்சீரிஸ் அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in