Lust Stories 2 | கஜோல், தமன்னா, மிருணாள் தாக்கூர் நடிக்கும் ஆந்தாலஜியின் ட்ரெய்லர் எப்படி?

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கஜோல், தமன்னா, மிருணாள் தாக்கூர் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ ( Lust Stories 2) ஆந்தாலஜி சீரிஸின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ என்ற தலைப்பில் இந்த ஆந்தாலஜி சீரிஸ் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரண் ஜோஹர் ஆகியோர் இயக்கத்தில் வெளியான இந்த ஆந்தாலஜியில் ராதிகா ஆப்தே, மணிஷா கொய்ராலா, க்யாரா அத்வானி, புமி பட்னேகர், விக்கி கவுசல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பெண்களின் விருப்பங்களை அவர்கள் பார்வையிலிருந்து வெளிப்படையாக பேசிய இந்த ஆந்தாலஜி சீரிஸ் ரசிகர்களிடையே ஹிட் அடித்தது.

அந்த வகையில் தற்போது இதன் இரண்டாம் பாகம் வரும் ஜூன் 29-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்த ஆந்தாலஜியில் நான்கு எபிசோட்கள் அடங்கியுள்ளன. இதில் கஜோல், தமன்னா, விஜய் வர்மா, திலோதமா ஷோம், அம்ருதா சுபாஷ், அங்கத் பேடி, குமுத் மிஸ்ரா, மிருணாள் தாக்கூர், நீனா குப்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனை அமித் ரவீந்தர்நாத் சர்மா, கொங்கோனா சென் சர்மா, ஆர்.பால்கி, சுஜோய் கோஷ் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

ட்ரெய்லர் எப்படி?: "இந்த உடல் ‘மவுண்ட் ஃபிஜி’ எரிமலை போன்றது" என்று நடிகை நீனா குப்தா பேசும் வசனத்துடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. தொடர்ந்து திலோதமா ஷோம், தமன்னா - விஜய் வர்மா, கஜோல், மிருணாள் தாக்கூர் உள்ளிட்டோரின் எபிசோட்களின் துணுக்குகள் அடுத்தடுத்து காட்டப்படுகின்றன. இடையிடையே நீனா குப்தா பேசும் ‘ஆழமான’ வசனங்களும் கவனம் ஈர்க்கின்றன. இத்தொடர் ஜூன் 29 அன்று வெளியாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in