‘பொம்மை’ முதல் ‘ஆதி புருஷ்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

‘பொம்மை’ முதல் ‘ஆதி புருஷ்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Updated on
1 min read

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.

தியேட்டர் ரிலீஸ்: எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘பொம்மை’ திரைப்படம் திரையரங்குகளில் நாளை (ஜூன் 16) வெளியாகிறது. சார்லி நடித்துள்ள ‘எறும்பு’ படமும், ஆதர்ஷ் மதிகாந்தம் இயக்கி நடித்துள்ள ‘நாயாடி’ படத்தையும் நாளை திரையரங்குகளில் காணலாம். தவிர பிரபாஸ், கீர்த்தி சனோன் நடித்துள்ள ‘ஆதிபுருஷ்’ படம் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. எஸ்ரா மில்லர் நடித்துள்ள ‘தி ஃப்ளாஷ்’ ஹாலிவுட் படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

நேரடி ஓடிடி ரிலீஸ்: கார்த்திக் சாமலன் இயக்கியுள்ள ‘அடை மழைக் காலம்’ படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கிறது. மணீஷ் முந்த்ரா இயக்கியுள்ள ‘சியா’ (Siya) இந்திப் படம் ஜீ5 ஓடிடியில் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. கிறிஸ் ஹேம்ஸ்வொர்த் நடித்துள்ள ‘எக்ஸ்ட்ராக்‌ஷன் 2’ (Extraction 2) நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெள்ளிக்கிழமை முதல் காணக்கிடைக்கும்.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: விமல் நடித்துள்ள ‘தெய்வமச்சான்’ அமேசான் ப்ரைம் ஓடிடியில் கடந்த ஜூன் 13-ம் தேதி வெளியானது. விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’ ஜீ5 ஓடிடியில் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. சாந்தனுவின் ‘இராவண கோட்டம்’ படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெள்ளிக்கிழமை முதல் காணலாம். விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ ஜூன் 17-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட உள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘ஃபர்ஹானா’ சோனி லிவ் ஓடிடியில் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

இணையதள தொடர்: தமன்னா நடித்துள்ள ‘ஸீ கர்தா’ (Jee Karda) இந்தி வெப்சீரிஸ் அமேசான் ப்ரைம் ஓடிடியில் தற்போது காணக்கிடைக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in