‘சிட்டாடெல்’ வெப் தொடரில் நடிக்க சமந்தா சம்பளம் ரூ.10 கோடியா?

‘சிட்டாடெல்’ வெப் தொடரில் நடிக்க சமந்தா சம்பளம் ரூ.10 கோடியா?
Updated on
1 min read

மும்பை: நடிகை சமந்தா, இந்தி நடிகர் வருண் தவணுடன் ‘சிட்டாடெல்’ என்ற வெப் தொடரில் நடித்துவருகிறார். பிரியங்கா சோப்ரா நடிக்கும் ஆங்கில வெப் தொடரின் இந்திய பதிப்பு இது. இதை ராஜ் மற்றும் டீகே இயக்குகின்றனர். இதில் பிரியங்காவின் பிளாஷ்பேக் காட்சியில், சமந்தாவும் வருண் தவணும் இடம்பெறுகின்றனர். இதன் படப்பிடிப்பு தற்போது செர்பியா நாட்டில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் தனக்கு ஹீரோவுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டதாக நடிகை பிரியங்கா சோப்ரா ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த தொடரில் நடிக்க சமந்தாவுக்கு ரூ.10 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. திரைப்படங்களில் நடிக்க ரூ.2 கோடி முதல் 3 கோடி வரை சம்பளம் வாங்கும் சமந்தா, வெப் தொடருக்கு இவ்வளவு ஊதியம் பெற்றிருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in