Published : 14 Jun 2023 09:44 PM
Last Updated : 14 Jun 2023 09:44 PM

ஜூன் 18-ல் ஓடிடியில் விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ ரிலீஸ்

விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் வரும் ஜூன் 18-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம், ‘பிச்சைக்காரன்’. ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே எழுதி இயக்கியுள்ளார். மேலும், அவரே படத்துக்கு இசையமைத்து படத்தொகுப்பும் செய்துள்ளார். இப்படத்தில் காவ்யா தாபர், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, ஒய்.ஜி.மகேந்திரா, அஜய் கோஷ், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மூளை மாற்று சிகிச்சை மற்றும் வர்க்க பேத நிலைகள், அண்ணன் - தங்கை பாசம் என பல்வேறு விஷயங்களைப் பேசும் இப்படம் மே 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் படம் தெலுங்கில், ‘பிச்சகாடு 2’ (Bichagadu 2) என் பெயரில் வெளியிடப்பட்டது. ரூ.15-20 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் ரூ.36 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளது. இந்நிலையில், இப்படம் வரும் ஜூன் 18-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x